Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலகலா

In
Updated: 08:49 GMT, Nov 7, 2015 | Published: 08:06 GMT, Nov 7, 2015 |
0 Comments
1686
This post was written by :

சிறுவர் முதல் பெரியோர் வரையும் சிற்றுண்டி வகைகளை விரும்புவதாலேயே நாம் அதிகமாக சிற்றுண்டிகளை செய்து வைக்கலாம். அதிலும் சிலவற்றை அன்றே சாப்பிட்டு முடிக்காமல் சில நாட்கள் வைத்து சாப்பிடவும் முடியும். அப்படியொரு தீபாவளி சிற்றுண்டி செய்முறை இதோ!

தேவையான பொருட்கள்:

மைதா – இரண்டு கப்
நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
முட்டை – ஒன்று
சோடா பைகார்ப் – கால் தேகரண்டி
தேங்காய் பால் – அரை கப்
சக்கரை – மூன்று டேபிள்ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் நெய் ஊற்றி அத்துடன் முட்டையை நன்றாக அடித்து சேர்த்து கலக்கவும்.

பின்னர் பாத்திரமொன்றை எடுத்து சோடாபைகார்ப் உடன் தேங்காய் பால் மற்றும் சக்கரை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும்.

மெதுவாக பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து நாற்பது நிமிடம் அப்படியே வைக்கவும். ஒவ்வொரு உருண்டையையும் அளவாக உருட்டி அதன் மீது முள்கரண்டியால் அழுத்தி குத்தி விட்டு கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக வரும் வரை கலகலாவை பொரித்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg