Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டைலர்ஸ் கழகத்தின் முதலாம் வருட பூர்த்தியை கொண்டாடும் லங்கா டைல்ஸ்

In வணிகம்
Updated: 10:15 GMT, Nov 7, 2015 | Published: 09:51 GMT, Nov 7, 2015 |
0 Comments
1270
This post was written by : Anojkiyan

இலங்கையில் சுவர் மற்றும் தரை டைல்கள் உற்பத்தி செய்வதில் முன்னோடிகளாக திகழும் லங்கா வோல் டைல்ஸ் பி.எல்.சி. மற்றும் லங்கா டைல்ஸ் பி.எல்.சி. ஆகியன தனது டைலர்ஸ் கழகத்தின் முதலாம் வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியிருந்தன

கொழும்பு தாமரைத் தடாகத்தில் இந்த மா பெரும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட லங்கா டைல்ஸ் பணியாளர்கள் பங்குபற்றினர்.

2014 செப்டெம்பர் மாதத்தில் லங்கா டைல்ஸ் டைலர்ஸ் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. நாடு முழுவதையும் சேர்ந்த 800 பேர் வரை இதில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டனர். டைல் பணியாளர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கழகமாக இது அமைந்துள்ளது.

இந்த ஸ்தாபக நிகழ்வில், டைல் பணியாளர்களுக்கு NFC செயற்படுத்தப்பட்ட அட்டை ஒன்றும் வழங்கப்பட்டிருந்ததுடன், கழகத்துடன் அவர்கள் தொடர்ந்து இணைந்திருக்கும் பட்சத்தில் பெறுமதி வாய்ந்த பணப்பரிசில்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலாம் வருட பூர்த்தி நிகழ்வில், 20 டைல் பணியாளர்களுக்கு தலா ரூபா 100,000 பணத் தொகை போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்ததுடன், 47 டைல் பணியாளர்களுக்கு தலா ரூபா 25,000 போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்தது.

லங்கா டைல்ஸ் பி.எல்.சி மற்றும் லங்கா வோல் டைல்ஸ் பி.எல்.சி ஆகியன பரந்தளவு வர்ணங்களிலான டைல்களை உற்பத்தி செய்து வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg