Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டயலொக் அக்ஸியாடாவுடன் கைகோர்க்கும் Ericsson

In வணிகம்
Updated: 10:18 GMT, Nov 7, 2015 | Published: 10:09 GMT, Nov 7, 2015 |
0 Comments
1146
This post was written by : Anojkiyan
dia_mini

Ericsson (NASDAQ: ERIC) மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியன இணைந்து, இலங்கையில் Managed Enterprise Cloud சேவைகளை அறிமுகம் செய்துள்ளன.

இதன் மூலமாக சேவை வழங்குநர்களுக்கு white – label நிறுவனசார் மென்பொருள்சார் சேவைகளை நெகிழ்ச்சித்தன்மையுடனும், வினைத்திறன் வாய்ந்த வகையிலும் வடிவமைத்து வழங்கக்கூடியதாக இருக்கும்.

Managed Enterprise Cloud கட்டமைப்பை பொருத்தமான தரவு நிலையத்தில் நிறுவி அதனை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை Ericsson முன்னெடுக்கும். இதனை Ericsson Global சேவை நிலையங்களினூடாக அதன் சொந்த செயற்படுத்துநர் அல்லது சேவை வழங்குநர் மேற்பார்வை செய்து நிர்வகிக்கும். சேவை வழங்குநரின் வாடிக்கையாளர்களுக்கு இந்த பகிரப்பட்ட நிறுவனசார் சேவைகளை பாதுகாப்பான இணைய கட்டமைப்பினூடாக அணுகக்கூடியதாக இருக்கும்.

தனது முதலாவது வாடிக்கையாளரான டயலொக் நிறுவனத்துக்கு, இந்த சேவைகளை Ericsson வழங்கவுள்ளதுடன், பெருமளவான வியாபார அப்ளிகேஷன்களை இலங்கையின் வியாபார ஸ்தாபனங்களுக்கு இதனூடாக கிடைக்கச் செய்யக்கூடியதாக இருக்கும்.

அறிமுக நிகழ்வில், இந்த அப்ளிகேஷன்கள் தெரிவுகளில் e-mail server, a web client, a content management framework, a customer relationship management system  மற்றும் a content management platform போன்றன ஒரு ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் இலகுவாக அணுகக்கூடிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். Managed Enterprise Cloud உடன் டயலொக் மூலமாக, தனது சகல வியாபாரசார் வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

Managed Enterprise Cloud என்பது, சேவை வழங்குநர்களுக்கு துரித கதியில் cloud வியாபார cloud வழங்கல்களை உருவாக்கி, சேவை ஒன்றாக விற்பனை செய்யக்கூடிய வகையிலமைந்த முறைக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg