Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mangala Mohotha மணப்பெண் அலங்கார நிகழ்வு 2015

In வணிகம்
Updated: 10:26 GMT, Nov 7, 2015 | Published: 10:26 GMT, Nov 7, 2015 |
0 Comments
1351
This post was written by : Anojkiyan

சருமம் மற்றும் அழகு பராமரிப்பு துறையில் முன்னோடியாக விளங்கும் My Chemist குழுமமானது ‘Mangala Mohotha மணப்பெண் அலங்கார நிகழ்வு 2015’ இன் பிரதான அனுசரணையாளர்களுள் ஒன்றாக கைகோர்த்துள்ளது.

இந்த மணப்பெண் அலங்கார நிகழ்வு தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கலதாரி ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற அழகுகலை நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். இந் நிகழ்வுக்கான அனுமதிகட்டணம் ரூ.3500 ஆக உள்ளதுடன், இல.41 ரிட்ஜ்வே பிளேஸ், கொழும்பு 04 எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் (SLAHAB) இன் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

SLAHAB மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நாட்டின் முன்னணி வடிவமைப்பாளர்கள், கூந்தல், ஒப்பனை மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் நவீன திருமண வடிவமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொக்டேல் விருந்தினை தொடர்ந்து பேஷன் ஷோ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.

2014 நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த வருட நிகழ்வில் 40-45 வரையான முன்னணி வடிவமைப்பாளர்கள், சிகை, ஒப்பனை மற்றும் அழகுக்கலை வல்லுநர்கள் தத்தமது 2015 தெரிவுகளை காட்சிப்படுத்தவுள்ளனர். மேலும் இந் நிகழ்வில் கண்டியன், இந்தியன் மணப்பெண் அலங்கார பாணிகளும், இந்து மற்றும் முஸ்லீம் கலாச்சாரங்களுக்கேற்ற மணப்பெண் அலங்காரங்களும் வெளிப்படுத்தப்படவுள்ளன.

கடந்த தசாப்தங்களில் நாம் பெற்றுக்கொண்ட தேர்ச்சியுடன் My Chemist குழுமமானது உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளது. புதுமையான சரும மற்றும் அழகு பராமரிப்புச் சாதனங்கள் இத்துறையில் எழும் உலகளாவிய போக்குகளுக்கமைய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. சரும பராமரிப்பு மற்றும் அழகு பராமரிப்பு சாதனங்களின் பரந்துபட்ட தெரிவுகள் தர நியமங்களுக்கமைய உருவாக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg