Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவாசினி பூஜை செய்வது மகத்தானது

In ஆன்மீகம்
Published: 06:36 GMT, Nov 8, 2015 |
0 Comments
1326
This post was written by :
20120913_sa1139

பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, விரதமிருந்து சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம் செய்வர். இதில், வயது கணக்கில்லை.

சுவாசினி என்றால் நமஸ்காரம் செய்யலாம், அவர்களும் அட்சதை போட்டு ஆசீர்வதிக்கலாம். பல இடங்களில் இந்த சுவாசினி பூஜையை ஏராளமான பொருட்செலவில் வசதி படைத்தவர்கள் நடத்துகின்றனர். இதில், சுவாசினியாக உட்காருவதும் அல்லது தரிசனம் செய்வதும் கூட மகத்தான புண்ணியம். அம்பிகை, பராசக்தி பெண். அவள் தான் உலக மக்களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தவள்.

அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு பொருந்தும். இதற்கான பல கதைகள் புராணங்களில் உள்ளன. அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுவுமின்றி அம்பாளின் நெற்றியிலே குங்கும திலகம் பிரகாசிக்கிறதாம், வாக்கிலே தாம்பூலம் கமழுகிறதாம். சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் இதைப் பற்றி ஸ்லோகம் இயற்றியுள்ளார்.

பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய கொலுசும் அணிய வேண்டுமாம். கையில் உள்ள கண்ணாடி வளையல் சப்தமும், கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து, கூடவே இருப்பாளாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg