Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொக்லேட் பாதுஷா

In
Updated: 09:23 GMT, Nov 8, 2015 | Published: 09:17 GMT, Nov 8, 2015 |
0 Comments
1333
This post was written by :

தேவையான பொருட்கள்:

கோதுமை மா – 150 கிராம்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – அரை சிட்டிகை
சர்க்கரை – 250 கிராம்
பால் – ஒரு டீஸ்பூன்
சொக்லேட் துருவல் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – கால் கிலோ
நெய் – 2 டீஸ்பூன்
கலர் கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன்
தயிர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பை மூட்டி வாணலியை வைத்து அதில் சர்க்கரையினை இட்டு ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட வேண்டும். கொதித்து வருகையில் ஒரு டீஸ்பூன் பாலையும் அத்துடன் சேர்க்க வேண்டும். அது கொதிக்கையில் மேலே படியும் அழுக்கை நீக்கவும். இந்த பாகு நன்கு கொதிக்கும்போது அதில் துருவிய சொக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்).

மற்றுமொரு பாத்திரத்தில் சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க அடித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கோதுமை மா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும்.

மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சொக்லேட் சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.

குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg