Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச ரீதியில் செழிப்படைந்துவரும் நாடுகளில் இலங்கை

In வணிகம்
Updated: 12:46 GMT, Nov 8, 2015 | Published: 12:38 GMT, Nov 8, 2015 |
0 Comments
1374
This post was written by :

சர்வதேச ரீதியாக செழிப்படைந்து வரும் நாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ஆண்டு இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தினை விட இவ்வருடம் இந்த ஆய்வில் இலங்கை 61வது இடத்தை பெற்றுள்ளது. 2015ம் ஆண்டில் சர்வதேச ரீதியாக செழப்படைந்து வரும் நாடுகள் தொடர்பான ஆய்வில் சுமார் 142 நாடுகள் உட்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

சர்வதேச நிபுணத்துவத்தைக் கொண்ட அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நாடுகள் குறித்து பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பொருளாதாரம், நல்லாட்சி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என்பன உட்பட எட்டு துறைகள் இந்த ஆய்வின் போது ஆராயப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கை 62வது இடத்தை பிடித்திருந்தது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg