Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளியை சிறப்புற கொண்டாடுவது ஏன்?

In ஆன்மீகம்
Updated: 06:17 GMT, Nov 9, 2015 | Published: 06:17 GMT, Nov 9, 2015 |
0 Comments
1432
This post was written by :

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார்.”முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமாதேவியும் மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவியும் நிறைந்திருக்கிறார்கள். தீபாவளி நாளில் நீர் நிலைகளில் கங்கையும், புத்தாடை, அணிமணிகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும் உறைகிறார்கள்.

இனிப்புப் பலகாரங்களில் அமிர்தம் நிறைகிறது. மலர்களில் யோகினிகள் வசிக்கிறார்கள். தீபத்தின் சுடரில் பரமாத்மாவும், பட்டாசுகளின் தீப்பொறியில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள். எனவேதான் தீபாவளித் திருநாளில் எல்லா தெய்வங்களின் அருளையும் பெறும் விதமாக, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மலர்களால் இறைவனை அலங்கரித்து, தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட்டு, பலகாரங்களை நிவேதனம் செய்து உண்டு, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி கொண்டாட இயலாதபடி வறுமையில் உள்ளவருக்கு, அதனைக் கொண்டாட உதவுவது, கோடானகோடி தான பலன்களுக்கு ஈடானது..! என்று தீபாவளிப் பண்டிகையின் பெருமையினை “எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.

தீபாவளியை கொண்டாடுவது குறித்து சனாதன முனிவர் கூறுகையில், ‘தீவிர விரதங்களால் மட்டும்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காண முடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்புபண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg