Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘டபாஸ்’ பட்டாசு ஆன கதை!

In ஆன்மீகம்
Updated: 07:55 GMT, Nov 9, 2015 | Published: 06:34 GMT, Nov 9, 2015 |
0 Comments
1262
This post was written by :

“டபாஸ்” என்கிற சமஸ்கிருதச் சொல்லுக்கு உரத்த ஒலி என்று அர்த்தம். இந்த வார்த்தையே பிற்காலத்தில் ‘பட்டாசு’ ஆனது.

வெடி மருந்துகளையும், பட்டாசுகளையும் முதன்முதலாக கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக காகிதத்தை சுருட்டி வெடிமருந்தைத் திணித்து பட்டாசுகளாக உருவாக்கும் பழக்கும் சீனாவின் லிங் வம்ச காலத்தில் உருவானது.

பட்டாசுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ‘பைரோடெக்னிக்ஸ்’ என்கிறார்கள். ‘மஹதாப்’ என்கிற உருதுச் சொல்லில் இருந்துதான் மத்தாப்பு வந்ததாக சொல்கிறார்கள்.

மத்தாப்பில் ஸ்ட்ரான்சியம் உப்பு கலக்கப்பட்டால் சிகப்பு நிறத்திலும், பேரியம் உப்பு கலக்கப்பட்டால் பச்சை நிறமாகவும், சோடியம் உப்பு கலக்கப்பட்டால் மஞ்சள் நிறமாகவும் எரியும். மற்ற பட்டாசுகளிலும் இந்த நிறச்சேர்க்கை நிகழ இவையே கச்சாப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg