Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளித் திருநாள் கூறும் தத்துவம்

In ஆன்மீகம்
Updated: 07:58 GMT, Nov 9, 2015 | Published: 07:25 GMT, Nov 9, 2015 |
0 Comments
1463
This post was written by :

மனித உள்ளங்களில் குடிகொண்டுள்ள கொடிய குணங்கள், இருள், அகங்காரம், அறியாமை, அஞ்ஞானம் போன்ற வேண்டத்தகாதவை யாவும் அகன்று உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டுமென்ற பெரும் தத்துவத்தைக் கூறுவதாலேயே தீபாவளித் திருநாள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய தீபத்திருநாளின் தத்துவங்களை இந்து மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருத்தல் முக்கியம். சமய நம்பிக்கைகள் தொடர்பாக நம் அனைவரிடமும் ஒரேவிதமான நிலைப்பாடு இருப்பதில்லை. எனினும் சமயம் கூறும் தத்துவங்களில் ஏராளமான உண்மைகள் பொதிந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

கங்கா ஸ்நானம் முடிந்தபின் பூஜையறையில் மகாலட்சுமி விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் விளக்கேற்றி, இனிப்புப் பண்டம் வைத்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழவேண்டும். இதனால் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் கைகூடும். பிள்ளைப்பேறு கிட்டும். சுமங்கலிகள் மேன்மையடைவார்கள்.

நம் வீட்டு குலதெய்வத்தை குறிப்பாக பெண் தெய்வங்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்த உடை, நிவேதனங்களுடன் வணங்க வேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் இதனை செய்யலாம். தீபாவளியன்று செய்வது மேலும் சிறப்பாகும். நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களுக்குப் பிரியமானவற்றைப் படைத்து அவர்கள் ஆசியைப் பெறவேண்டும். இதனால் நம் குடும்பத்திற்கும் வம்சத்திற்கும் நன்மை கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg