Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திய பாஜகவின் தோல்வி

In வணிகம்
Updated: 19:30 GMT, Nov 9, 2015 | Published: 08:37 GMT, Nov 9, 2015 |
0 Comments
1313
This post was written by : Shailu

பீகார் சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச்சந்தை நிலவரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மும்பை பங்கு சந்தையில் இன்று (திங்கட்கிழமை) காலை வர்த்தகம் தொடங்கியதும் வீழ்ச்சி ஏற்பட்டது. தேர்தல் தோல்வியால் மத்திய அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் காரணமாக பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்த சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்கில் 502 புள்ளி வீழ்ச்சி ஏற்பட்டது. நிப்டியில் 150 புள்ளி சரிவு காணப்பட்டது. இந்நிலையில் சுமார் 10 மணிக்கு பின்னர் பங்கு சந்தை வர்த்தகத்தில் சற்று மேம்பாடு காணப்பட்டது.

இதனையடுத்து இன்றைய பங்கு சந்தை வீழ்ச்சியால் மாருதி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், லூபின், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியவற்றின் பங்கு மதிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு இன்று டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74 ரூபாக்கள் குறைந்து ரூ. 66.47 ஆக குறைந்தது.

இதற்கிடையே பீகாரில் பா.ஜ.க. தோல்வியை தழுவியதால் இந்திய பொருளாதாரத்துக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பாண்டில் மொத்த வருவாயில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதோடு இந்த நிதி பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg