Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முளைக்கீரை கட்லட்

In
Updated: 10:16 GMT, Nov 9, 2015 | Published: 09:02 GMT, Nov 9, 2015 |
0 Comments
1293
This post was written by :

வீட்டில் வடை பாயாசத்துடன் விருந்து வைத்தால் எவ்வளவு ருசித்து சாப்பிட பிடிக்குமோ அதே அளவு நமக்கு பிடித்த சிற்றுண்டிகளையும் விரும்பி உண்ணுவது வழக்கம்! அதனால் எல்லோருக்கும் பிடித்த கட்லட் செய்முறை இன்று சத்து நிறைந்ததாக வருகிறது. செய்து பாருங்களேன் கீரை கட்லட்!

தேவையான பொருட்கள்:

முளைக்கீரை (பொடியாக நறுக்கியது)-ஒரு கப்,
கடலைமாவு-அரை கப்,
பெரிய வெங்காயம்-1,
பச்சை மிளகாய்-2,
பூண்டு-3 பல்,
இஞ்சி-ஒரு சிறிய துண்டு,
மல்லித்தழை-சிறிதளவு,
எண்ணெய்-தேவையான அளவு,
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

கீரையை துப்பரவு செய்து நன்றாக கழுவி நறுக்கிவைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை மூட்டி குக்கரை வைத்து உப்பு, மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைத்து எடுங்கள். (அதிகப்படியான தண்ணீரை வடித்து ரசம் அல்லது சாம்பாரில் சேர்க்கலாம்).

அதற்கிடையே வெங்காயம், மிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். பின்னர் மற்றுமொரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை சேர்த்து வதக்கி அத்துடன், வெந்தகீரையையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

இன்னுமொரு பாத்திரத்தில் கடலைமாவுடன் தேவையான தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரையுங்கள். இதனைக் கீரையுடன் சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறுங்கள்.

நன்கு சுருண்டு வரும்வரை கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியதும் துண்டுகள் போட்டால் சுவையான கட்லட் ரெடி.!

இந்த கட்லெட்டை அப்படியேவும் சாப்பிடலாம். வெறும் தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் ஊற்றி நன்கு புரட்டி எடுத்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg