Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானிய வர்த்தக குழுவினர் இலங்கை வருகை

In வணிகம்
Updated: 10:47 GMT, Nov 9, 2015 | Published: 10:47 GMT, Nov 9, 2015 |
0 Comments
1308
This post was written by :

பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் உட்பட்ட உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இந்த விஜயம் அமையும் என பாகிஸ்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானிய வரத்தக அமைச்சருடன் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவினரும் இணைந்து இம் முறை பல்வேறு வகையான வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சினை மேற்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, பாகிஸ்தானிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதாவது இலங்கையின் மருந்து பொருள், உணவு மற்றும் வாசனைத் திரவியங்கள், சீனி, கப்பற்துறை, கட்டுமானம் மற்றும் உற்பத்தி தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg