Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளிக்கு பூஜை செய்வது ஏன்?

In ஆன்மீகம்
Updated: 05:01 GMT, Nov 10, 2015 | Published: 05:01 GMT, Nov 10, 2015 |
0 Comments
1262
This post was written by :

துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்ற வேண்டும். எமதர்மராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகால மரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரகசதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்புமருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், நமக்கு அருள்பாலிப்பார்கள்.

இவற்றிற்கு கற்பூரஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள்’ என்றார். இப்படி தோன்றியது தான் தீபாவளி திருநாள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg