Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையவழிக் குற்றங்களினால் வட அயர்லாந்தின் பொருளாதாரம் பாதிப்பு

In வணிகம்
Updated: 07:46 GMT, Nov 10, 2015 | Published: 07:46 GMT, Nov 10, 2015 |
0 Comments
1286
This post was written by :

இணையவழிக் குற்றங்கள் காரணமாக வட அயர்லாந்தின் பொருளாதாரத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ் பாதிப்பு ஏற்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய மற்றும் பெரிய வர்த்தகங்கள் முதல் தனிநபர்கள் வரை இந்த இணையக் குற்றவாளிகள் இலக்கு வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு பணியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியம் என வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இணைய வழித்தாக்குதல்கள் தொடர்பில் பணியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதுடன், அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவ்வாறான இணையத் தாக்குதல்களை குறைத்துக் கொள்வது குறித்தும் வர்த்தக நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg