Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிக்கன் கப்ரியல்

In
Updated: 08:43 GMT, Nov 10, 2015 | Published: 08:43 GMT, Nov 10, 2015 |
0 Comments
1303
This post was written by :

சிக்கன் பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ருசியுடன் கூடிய சூப்பரான ரெசிபி இதோ செய்து பாருங்கள் சுவையை பகிருங்கள்!!

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி – அரை கிலோ
கொத்தமல்லி – அரை கட்டு (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
வெங்காயம் – இரண்டு (வட்டமாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (வட்டமாக நறுக்கியது)
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஐந்து
லவங்கம் – ஐந்து
பட்டை – மூன்று
சீனி – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – இரண்டு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஐந்து
எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

முதலில் கொத்தமல்லி, மிளகு, லவங்கம், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, மஞ்சள் தூள், சீரகம், சர்க்கரை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த கோழி இறைச்சி மற்றும் அரைத்த விழுது, எலுமிச்சை பழம் சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இந்த கலவையினை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, அடுப்பை மூட்டி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின், ஊறவைத்த கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

சிக்கன் கப்ரியல் இறைச்சி கறி சுண்ட வதக்கியதும் இறக்கி பரிமாறவும்.!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg