Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாம் உண்ணக்கூடாத உணவுகள் என ஞானிகளால் தவிர்க்கப்பட்டவை எது?

In ஆன்மீகம்
Updated: 06:20 GMT, Nov 11, 2015 | Published: 05:55 GMT, Nov 11, 2015 |
0 Comments
1317
This post was written by :

சில உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அவை என்னவென்று தெரியுமா?

பின் வாசல் வழியாகக் கொண்டு வந்த சோறு, வரகு முதலான தானியங்களினால் அமைந்தது, வாயினின்று விழுந்த பொருளுடன் சம்பந்தமுடையது, வாயில் போட்ட கவளத்தில் மீந்திருப்பது, கெட்டவர்கள் கண்ணால் பார்த்த உணவு, தீய்ந்து போனது, துணி, தும்மல் ஆகியவை பட்டது, நாய் முதலிய பிராணிகளால் முகர்ந்தது, உண்டது, ஏகாதசி போன்ற உண்ணாநோன்பு விரதகாலத்தில் சமைத்தது ஆகிய உணவுகள் தள்ளிவைக்கப்பட வேண்டியவை.

மேலும், பிராணிகள், மனிதர், முகர்ந்து பார்த்த உணவு, பிணியாளர்கள் ஸ்பர்சித்தது, விருப்பமில்லாமல் இன்முகமாக அளிக்கப்பட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை விழுந்தது, சந்யாசிகள் கொடுத்தது, அவர்கள் பாத்திரத்திலிட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியன வாய்பட்ட உணவும் விலக்கப்பட வேண்டியவை.

வாயில்லா வாயிலினால் வந்தசோறும்,
வரகு முதலாகா தென்றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதான் பட்டசோறும்
வாய்க் கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்,
தீயவர்கள் படுஞ்சோறும் தீதற் சோறும்
சீரையுரை தும்மலிவை பட்டசோறும்
நாய் முதலானவை பார்க்குந் தீண்டும்சோறு
நாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg