Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைகுண்ட பேறு தரும் சாளக்கிராம பூஜை

In ஆன்மீகம்
Updated: 07:13 GMT, Nov 11, 2015 | Published: 07:02 GMT, Nov 11, 2015 |
0 Comments
1299
This post was written by :

கல்லிலும் புல்லிலும் தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள். அதன்படி சாளக்கிராம ஸ்படிக கற்களாக வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவை வழிபடுவது காலம் காலமாக பல குடும்பங்களில் இருந்து வரும் ஒரு பழக்கம்.

சாளக்கிராமம் என்பது விசித்திரமான ஒரு கல். இது நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையோரம் மட்டும் கிடைக்கிறது. சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்ட ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலன் போன்ற தெய்வ மூர்த்தங்கள் உண்டு. கேரள ஆலயங்களில் சாளக்கிராம பிரதிஷ்டை முக்கிய இடம் பெறுகிறது.

பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. எல்லாக் கோயில்களிலும் இந்தச் சாளக்கிராம பூஜை முக்கிய இடம் பெறுகிறது. சாளக்கிராம பூஜை முடிந்த பிறகுதான் மூலவருக்கும் இதர தெய்வங்களுக்கும் பூஜை செய்வார்கள்.

சாளக்கிராம பூஜை மிக எளிதானது. குளித்து முடித்து மடியுடுத்தி மிகுந்த ஆசாரத்துடன் பூஜைப்பெட்டியில் வைத்துள்ள சாளக்கிராமத்தை எடுத்து புருஷசூக்தம் சொல்லி வழிபடலாம். துளசி தளம் சார்த்தலாம். வெளியூர் செல்ல நேர்ந்தால் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி அதன்மீது சாளக்கிரா மத்தை வைத்துச் செல்வது சிலர் வழக்கம்.

முக்கியமாக வீட்டில் ஆண்கள் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும். பெண்கள் இதைத் தொட்டு பூஜை செய்யக் கூடாது. பால், நீர் அபிஷே கம் செய்து சாதம், பருப்பு, பாயசம், நெய் என்று நைவேத்யம் செய்யலாம்.

சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். பொதுவாக விக்கிரகங்கள் பின்னப்பட்டுப் போனால் அதனை வழிபடுவது கூடாது என்ற காரணத்தினால் வேறு விக்கிரகத்தை புதியதாக பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள்.

ஆனால், சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டு உடைந்து விட்டாலும் அதை செப்பு, வெள்ளி கம்பிகளில் இணைத்து வைத்து பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதை பூஜையிலே வைத்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg