Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொக்லட் மொன்ட் ப்லான்க்

In
Updated: 09:46 GMT, Nov 11, 2015 | Published: 07:44 GMT, Nov 11, 2015 |
0 Comments
1279
This post was written by :

தேவையான பொருட்கள்:

பேஸ்ட்ரிக்கு:

கோதுமை – 50 கிராம்,
உப்பு சேர்க்காத வெண்ணெய் – 50 கிராம்,
முட்டை – 3
தண்ணீர் – 100 மி.லி.

மேல் நிரப்ப:

(Fresh Cream)  ப்ரெஷ் க்ரீம் – 1 கப்.
(Chocolate Trifle) சொக்லட் ட்ரபிளுக்கு – 1/2 கப் க்ரீமை சூடாக்கி, 100 கிராம் உடைத்த சொக்லட் பார் சேர்த்து உருக வைக்கவும்.

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர், வெண்ணெய் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். இத்துடன் கோதுமை மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். முட்டையை பாத்திரத்தில் இட்டு நன்றாக கலக்கி அடித்து அதை வெண்ணெய்-கோதுமை மா கலவையுடன் சேர்த்து அடிக்கவும்.

கலவையின் சூடு ஆறுவதற்குள் முட்டையைக் கலக்க வேண்டும். பைப்பிங் பேக்கில் (Piping bag) கலவையை வைத்து, தட்டில் வெண்ணெய் தடவி மா தூவி 1 இஞ்ச் நீளத்துக்கு இடைவெளி விட்டுப் பைப் செய்து 180°ஊ வெப்பத்தில் பேக் செய்யவும்.

பில்லிங் (Filling):

பேக் செய்த சொக்லட் பேஸ்ட்ரிகளை ஆற வைத்து எடுத்து அதில் க்ரீமை உள்ளே அடைக்கவும். பின் இவற்றை குளிரூட்டியில் (Freezer) வைத்து, நன்றாக குளிர்ந்து சரியான பதத்திற்கு வந்ததும் செய்த பின், சொக்லட்  ட்ரபிளை (Chocolate Trifle) மேலே ஊற்றி அலங்கரிக்கவும். தட்டின் மேல் வைக்கும் போது, ஒரு மலை போல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும். அது பிரான்ஸ் நாட்டின் உணவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg