Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிளெக் கரண்ட் ஐஸ் கிறீம்

In
Updated: 09:47 GMT, Nov 11, 2015 | Published: 08:54 GMT, Nov 11, 2015 |
0 Comments
1380
This post was written by :

தேவையான பொருட்கள்:

பால் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
கிரீம் – 1 கப்
பிளாக் கரன்ட் எசென்ஸ் – 2 டீஸ்பூன்
கருப்பு திராட்சை எசென்ஸ் – 2 டீஸ்பூன்
கருப்பு திராட்சை சாறு – அரை கப்
(Glyceryl Mono Sterate ) ஜி.எம்.எஸ் – அரை டீஸ்பூன்
ஸ்டெபிலைசர் – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஜி.எம்.எஸ்-ஐ சிறிதளவு பாலில் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். ஸ்டெபிலைசரை சிறிதளவு சர்க்கரையில் கலந்து, பிறகு இரண்டையும் சேர்த்துக் கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

கருப்பு திராட்சையில் கொட்டை நீக்கி, பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, சாறு எடுக்கவும்.

பால், சர்க்கரை, கிரீம், எசென்ஸ், திராட்சை சாறு, பிறகு ஜி.எம்.எஸ், ஸ்டெபிலைசர் கலவையும் சேர்த்து, பின், குளிரூட்டியில் வைத்து செட் செய்யவும். 4 அல்லது 5 முறை மீண்டும், மீண்டும் வெளியில் எடுத்து, ஒரு மரக்கரண்டியால் அடித்துப் பின், 6 முதல் 7 மணி நேரம் செட் ஆன பிறகு பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg