Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வட இந்திய மக்கள் : களை கட்டிய வியாபாரம்

In வணிகம்
Updated: 13:01 GMT, Nov 11, 2015 | Published: 10:21 GMT, Nov 11, 2015 |
0 Comments
1371
This post was written by : Shailu



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள சந்தைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.

இன்று புதன்கிழமை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வட இந்தியாவில் இராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பிய ராமனை போற்றும் வண்ணமாக அகல் விளக்கேற்றி இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

போபால் நகரில் இந்துக்கள் வீடுகளை மின் விளக்குகளினால் அலங்கரித்தும், இனிப்புகளை பரிமாறியும் என்றும் இல்லாத வண்ணம் தீபாவளியை கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்துக்களின் கடவுள்களான விநாயகர் மற்றும் லக்ஷ்மி ஆகியோருக்கும் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் குடியிருப்பவர்களின் நட்புறவை பலப்படுத்துவதாக இந்த தீபாவளி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg