Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலிபன்ட் ஹவுசின் புதிய பானம் அறிமுகம்

In வணிகம்
Updated: 12:47 GMT, Nov 11, 2015 | Published: 12:46 GMT, Nov 11, 2015 |
0 Comments
1321
This post was written by :

கொழும்பு CR&FC மைதானத்தில் இடம்பெற்ற ரக்பி உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தின் திரையிடலின் போது இந்த பானத்தின் அறிமுகம் இடம்பெற்றிருந்தது.

எலிபன்ட் ஹவுஸ் F5 என்பது, புத்துயிரூட்டும் விளையாட்டு வீரர்களுக்கான பானமாகும். பயிற்சிகள், விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இழந்த சக்தியை மீளப் பெற்றுக் கொள்ளும் வகையில் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பானமாகும்.

இதன் மூலம் வீரர்களுக்கு உயர்ந்த வினைத்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சிறந்த சுவையையும் அனுபவிக்க முடியும். Isotonic பானங்களின் மூலமாக எந்தவொரு உடற்பயிற்சி மூலமாகவும் வியர்வையினால் உடலிலிருந்து வெளியேறிய திரவங்கள் மற்றும் electrolytes ஆகியவற்றை மீளப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது.

அளவுக்கதிகமான வியர்வை காரணமாக உடலில் நீர்த்தன்மை குறைவடையும் என்பதால், இது மிகவும் இன்றியமையாத தேவையாக உள்ளது. தற்போது சிட்ரஸ் மற்றும் ஒரேன்ஜ் ஆகிய இரு சுவைகளில் 350 மி.லீற்றர் போத்தல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலிபன்ட் ஹவுஸ் F5, நாடு முழுவதும் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட கீல்ஸ் சுப்பர் உள்ளடங்கலான விற்பனைத்தொடர்கள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg