Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரும ஆரோக்கியத்திற்கு சில குறிப்புக்கள்

In
Updated: 05:10 GMT, Nov 12, 2015 | Published: 05:10 GMT, Nov 12, 2015 |
0 Comments
1446
This post was written by :

வெறும் நீரில் கழுவினால் மட்டும் சருமம் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அதற்கு நாம் ஒரு சில செயல்களை அன்றாடம் பின்பற்றவும் வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்க முடியும்.

சுற்றுச்சூழல் மாசுக்களில் இருந்து பாதுகாப்பு கொடுங்கள்:

மாசுக்களில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், ஒமேகா-3 ஃபேடி ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உடலின் உட்பகுதியில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

தண்ணீர் குடியுங்கள்:

எப்படி ஒரு இயந்திரம் சீராக செயல்பட எண்ணெய் அவசியமோ, அதேப் போல் உடலுறுப்புக்கள் சீராக செயல்பட தண்ணீர் அவசியம். அதேப்போல் சருமத்தின் வழியே அழுக்குகளை வெளியேற்றவும், பருக்கள் வராமல் தடுக்கவும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.

சன் ஸ்கீரின் பயன்படுத்துங்கள்:

அதிக அளவில் சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து சரும சுருக்கங்கள் ஏற்படும். எனவே இவற்றைத் தடுக்க சன் ஸ்க்ரீனை தினமும் தவறாமல் தடவ வேண்டும்.

கிளின்சர்களை பயன்படுத்துங்கள்:

சோப்புக்களை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வெளியேறி சருமம் அதிக அளவில் வறட்சியடையும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால் மைல்டு கிளின்சர்கள் அல்லது ஃபேஸ் வாஷ்ஷைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்:

உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். எனவே அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்காதீர்கள்.

டோனர் பயன்படுத்தவும்:

சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இயற்கை டோனர்களான ரோஸ் வாட்டர், பால் ஆகியவற்றைக் கொண்டு தினமும் 2-3 முறை முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அழுக்குகள் முழுமையாக வெளியேறி சருமம் பளிச்சென்று மின்னும்.

உணவில் கவனம் செலுத்துங்கள்:

சருமத்தின் ஆரோக்கியம் வெறும் பராமரிப்பில் மட்டுமின்றி உண்ணும் உணவிலும் உள்ளது. எனவே விட்டமின்கள் அதிகம் நிறைந்த எலுமிச்சை, பாதாம், ஆப்பிள், பெர்ரிப் பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி அதிகம் சாப்பிடுங்கள். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg