Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோஷங்கள் நீக்கும் மலர்கள்

In ஆன்மீகம்
Updated: 05:58 GMT, Nov 12, 2015 | Published: 05:58 GMT, Nov 12, 2015 |
0 Comments
1283
This post was written by :

சூரிய பகவான்:

ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

சந்திர பகவான்:

திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

அங்காரக பகவான்:

செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்துச் சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

புதன் பகவான்:

புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

குருபகவான்:

வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

சுக்கிர பகவான்:

வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

சனிபகவான்:

சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

ராகு பகவான்:

ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

கேது பகவான்:

ஏதாவதொருகிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg