Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இழந்தவற்றை திரும்பப் பெற உதவும் அனந்த விரதம்

In ஆன்மீகம்
Updated: 06:23 GMT, Nov 12, 2015 | Published: 06:14 GMT, Nov 12, 2015 |
0 Comments
1279
This post was written by :

அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த சிறப்புமிக்கதொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயக சதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும், நம் பூலோக இச்சைகளை முழுவதுமாக நிறைவேற்றி வைப்பதால் காம்யா விரதம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்நாளில் பரந்தாமனிடமிருந்து வெளிப்படும் சக்தி அலைகள் இவ்வுலகம் முழுவதும் பரவியிருக்குமாம். ஆகையால் அந்நாளில் விரதமிருந்து அனந்தனை வழிபட்டால் அந்தச் சூட்சுமச் சக்தி அலைகள் நம்மில் இரண்டறக் கலக்கும் என்பது நம்பிக்கை.

அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

நம் கர்மவினைகளின் காரணமாக நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது.  இதன் மகிமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, பாண்டவர்களுக்கு கூறி அருளியிருக்கிறார்.

‘அனந்தன்’ என்பது ஸ்ரீ ஆதிசேஷனின் திருநாமமென்றாலும், அனந்தன் மேல் அறிதுயில் கொண்டருளும் அனந்த பத்மநாப ஸ்வாமியைக் குறித்தே இந்த விரதம் செய்யப்படுகிறது. வாழ்வில் கர்ம வினைகளின் காரணமாக நாம் இழந்தவற்றைப் பெற உதவும் அற்புத விரதம் இது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg