Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் 5 மாத தடைக்குப் பின் மீண்டும் விற்பனைக்கு வந்த மேகி நூடுல்ஸ்

In வணிகம்
Updated: 07:02 GMT, Nov 12, 2015 | Published: 07:02 GMT, Nov 12, 2015 |
0 Comments
1260
This post was written by :

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் 5 மாத கால தடைக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

மேகி நூடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுக்கோமேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விற்பனைக்கு கடந்த ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அங்கீகரிக்கப்பட்ட 3 பரிசோதனை கூடங்களில் மாதிரிகளை சோதித்து அதன் அடிப்படையில் அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இந்த பரிசோதனையில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்பது கண்டறியப்பட்டது.

இதன்பிறகு கர்நாடகா, பஞ்சாப், கோவாவில் உள்ள ஆலைகளில் மேகி உற்பத்தியை தொடங்கியது.

புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட 20 கோடி மேகி மசாலா நூடுல்ஸ் பேக் மாதிரிகள், அங்கீகாரம் பெற்ற 3 ஆய்வுக்கூடங்களிலும் 3,500 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது.

கடைகளில் தவிர, இணையம் மூலமும் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓன்லைனில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மேகி மீண்டும் சந்தையில் தனது பழைய நிலையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg