Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உறவை அதிகரிக்க புதிய முயற்சி

In வணிகம்
Updated: 11:33 GMT, Nov 12, 2015 | Published: 11:33 GMT, Nov 12, 2015 |
0 Comments
1340
This post was written by :

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் அதிகரிக்க பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதல் கட்டகமாக, பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது, அவருடன் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழு ஒன்றும் பங்கேற்கவிருப்பதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இலங்கையில் மருந்து பொருள், உணவு, வாசனைத் திரவியங்கள், சீனி கப்பற்துறை கட்டுமானம் மற்றும் உற்பத்தி தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg