Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்த சஷ்டி விரதம் : முதலாம் நாள் நிகழ்வுகள்

In ஆன்மீகம்
Updated: 17:05 GMT, Nov 12, 2015 | Published: 17:05 GMT, Nov 12, 2015 |
0 Comments
1344
This post was written by : Varothayan

இந்துக் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் எல்லாம் முதன்மையானது கந்தசஷ்டி விரதமாகும். சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவோருக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விரதம் கோலாகலமாக ஆரம்பமானது. இன்றைய முதல் நாள், நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற இந்து ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், செல்வச்சந்திதி முருகன் ஆலயம், இணுவில் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றிலும் சிறப்பாக இடம்பெற்றது.

கந்த சஷ்டி விரதம் இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியா மற்றும் தமிழர்கள் – இந்துக்கள் வாழும் நாடுகள் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் வரும் 17ம் திகதி நடக்கிறது.

12195093_951044181600759_2782876841175633236_o 12240436_951043974934113_4413986338446444948_o 12240456_951043981600779_5901123641589085665_o 12240831_951044448267399_6100794433322620287_o 12244448_951045394933971_1800914258968089592_o

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg