Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிருத்திகை விரத சிறப்பு

In ஆன்மீகம்
Updated: 10:56 GMT, Nov 13, 2015 | Published: 10:56 GMT, Nov 13, 2015 |
0 Comments
1309
This post was written by :

கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும் கார்த்திகை விரதமும், உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில் வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களிடம், சிவபெருமான் ‘கார்த்திகை விரதம் இருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி, நல் வாழ்வு அளித்து, இறுதியில் முக்தியும் கொடுப்பேன் என்று வரமளித்தார்.’

எனவே தான் ஆடி மாதக் கார்த்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து திருத்தணிகை முருகனை மனமார நினைத்து வணங்குவது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத்தரும்.

இந்த நாளில் விரதம் இருந்து வேல்மாறல் மகாமந்திரம் படிப்பதும் சிறப்பான பலன்களை பெற்றுத்தரும். முதன் முதலில் வேல்மாறல் பாராயணம் ஆரம்பிப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தொடர்ந்து வேல்மாறல் படித்து வரலாம். முருகனுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்களில் வேல்மாறலும் ஒன்று.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg