Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்கச்செய்யும் விரதம்

In ஆன்மீகம்
Updated: 10:59 GMT, Nov 13, 2015 | Published: 10:59 GMT, Nov 13, 2015 |
0 Comments
1608
This post was written by :

பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்ததாக போற்றப்படும் ஆடிமாதம் அம்மன் மாதமாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டி ஆடி செவ்வாய் தேடிக்குளி; அரைச்ச மஞ்சளை பூசிக்குளி என்பது பழமொழி”.

ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட வேண்டும். இப்படி செய்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்ததாக போற்றப்படும் ஆடிமாதம் அம்மன் மாதமாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டி கங்காதேவிக்கு விரதமிருந்து வழிபாடு செய்து சுமங்கலி பூஜை நடத்துவர்.

காவிரி கரையில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து நீராடி காவிரியை வணங்கி தங்கள் கழுத்தில் அணிந்துள்ள தாலிக்கயிற்றை மாற்றி புதுக்கயிறு அணிந்து கொள்வர்.

இதற்கு ஒரு கதை உண்டு. பரமசிவன்–பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்த போது தேவர்களும், முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதனால் அகத்திய முனிவரை தென்திசைக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்துமாறு சிவபெருமான் கேட்டுக்கொண்டார்.

சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதிதேவி ஒற்றைக்காலில் நின்று தவம் மேற்கொண்ட போது கையில் ஒரு மாலையையும் வைத்திருந்தாள். அந்தமாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள் அவள்.

அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடைத்து வைத்து இருந்தார். அவர் தென்திசை நோக்கி வரும் போது அவரது கமண்டத்தில் இருந்த தண்ணீரை விநாயகர் காகம் வடிவில் வந்து கவிழ்த்துவிட அந்த தண்ணீரே காவிரியானது. ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வரும்.

புதுப்புனலாக பொங்கி வரும் காவிரியை மக்கள் பார்வதிதேவியின் அம்சமாகவே கருதி வழிபட்டனர். அவரை பயபக்தியுடன் வணங்கி வழிபட்டால் தங்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார் என்ற நம்பிக்கையும், ஐதீகமும் ஏற்பட்டது. இதனால் ஆடிப்பெருக்குவிழா மங்கலம் தரும் மகோன்னத விழாவாக வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg