Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமுடியை சாயமூட்டும் முன்னர் கவனிக்க வேண்டியவை

In
Updated: 07:15 GMT, Nov 14, 2015 | Published: 07:15 GMT, Nov 14, 2015 |
0 Comments
1349
This post was written by :

தலைமுடிக்கு சாயமூட்டுதல் என்பது, தற்போது உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் தங்கள் தலைமுடிக்கு சாயமூட்டுகின்றனர். இது மட்டுமன்றி ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழியும் அதுதான்.

தற்போது தலைமுடிக்கு சாயமூட்டுதல், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. தலைமுடிக்கு சாயமூட்டுதல் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வண்ணங்கள் ஆகியன, திரவம், பவுடர், எண்ணெய், கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர சாயமூட்டுதல் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் (Semi-permanent) சாயம் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

கூந்தலின் நீளத்தைப் பொறுத்து, அதற்கு நிறமூட்டல் செய்வதற்கான செலவும் அமையும். குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, நிறமூட்டல் செய்தால், மிக அழகாக தோற்றமளிக்கும். இதனை செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்ளுவதா அல்லது தற்காலிகமாக செய்து கொள்ளுவதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நரை முடியை மறைப்பதற்காக சாயமூட்ட விரும்புபவர்கள், நிரந்தமான முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மேலும், ஒட்டுமொத்த கூந்தலையும் நிறமூட்டல் செய்து கொள்ளுவதா அல்லது ஹைலைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை தலைமுடிக்கு சாயமூட்டும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர்.  கூந்தல் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு ‘ஹைலைட்டிங்’ என்று பெயர்.

பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள் மாநிற சருமத்தினருக்கும், சிவப்பு நிறம் நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தலைமுடிககு இடப்படும் சாயம் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் (Copper) அல்லது சிவப்பு நிறத்தில் சாயமூட்டுவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.  ஏனென்றால், இவை விரைவில் வெளிறிவிடும் தன்மை கொண்டது. நிறமூட்டல் செய்த பின், அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே பயன்படுத்த வேண்டும்.

தலைமுடிக்கு தகுந்தவாறு நிறமூட்டல் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். முடியை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg