Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்காலி அப்பிள்

In
Updated: 08:20 GMT, Nov 14, 2015 | Published: 08:19 GMT, Nov 14, 2015 |
0 Comments
1269
This post was written by :

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நீக்காத பசும்பால் – அரை லிட்டர்
வினிகர்     – 1 டீஸ்பூன்
சீனி       – 150 கிராம்
தண்ணீர்     – 250 மி.லி
அலங்கரிக்க – செர்ரி
சில்வர் பேப்பர்

செய்முறை:

அடுப்பை மூட்டி கனமான பாத்திரத்தை வைத்து பாலைக் கொதிக்க விடவும். ஒரு கொதி வரும் போது, வினிகர் சேர்த்து, அடுப்பை அணைக்கவும். பால் தனியே, தண்ணீர் தனியே  பிரியும். அதை ஒரு துணியில் வடிகட்டி எடுக்கவும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, மிருதுவாக வரும் வரை நன்கு  தேய்க்கவும். பிறகு அதிலிருந்து சிறு உருண்டையை எடுத்து, அழுத்தி, விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.

250 மி.லி. தண்ணீரில் 150 கிராம் சீனி சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பாகு பதத்துக்கு வர வேண்டும் என்கிற  அவசியமில்லை. சீனி கரைந்தால் போதும். அதில் தயாராக உள்ள உருண்டைகளை சேர்த்து, குறைந்த தணலில் 10 நிமிடங்கள் வைத்திருந்து,  அடுப்பை அணைக்கவும். 2-3 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து, குளிர வைக்கவும். செர்ரி பழங்கள் மற்றும் சில்வர் பேப்பரால் அலங்கரித்து தேவையானபோது பறிமாறலாம்

இதையே இன்னும் சற்று வித்தியாசமாக மாற்ற நினைப்போர், குளிர வைப்பதற்கு முன், உருண்டைகளை மத்தியில் இரண்டாகப் பிளந்து, ஸ்டஃபிங் செய்து,  இன்னொரு பாதியால் மூடி, குளிர வைத்து, மேலே செர்ரி வைத்து ஐசிங் செய்து பரிமாறலாம். விருப்பப்பட்டால் ஸ்டஃபிங்  செய்வதற்கு இனிப்பு சேர்த்த கோவா, உடைத்த நட்ஸ், பேரீச்சம் பழம், சீஸ் துருவல் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg