Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Huawei நிறுவனம் நுகர்வோருக்கு வழங்கும் புதிய சுற்றுலா!

In வணிகம்
Updated: 08:48 GMT, Nov 14, 2015 | Published: 08:48 GMT, Nov 14, 2015 |
0 Comments
1276
This post was written by :

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் மத்தியில் முன்னெடுக்கின்ற ஊக்குவிப்பு நிகழ்வான “Huawei Dream World 2015” என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை Huawei இன் நுகர்வோர்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கான அனைத்துச் செலவுகளும் உள்ளடங்கிய வியப்பூட்டும் உலகச் சுற்றுலாவை வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.

இந்த பண்டிகைக் காலத்தில் Huawei வர்த்தகநாமம் கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை கொள்வனவு செய்வதன் மூலமாக தமக்கு விருப்பமான நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாவிற்கான வாய்ப்பினை வெல்ல முடியும்.

மாபெரும் இறுதி வெற்றியாளர் ஐரோப்பாவிற்கான 10 நாள் சுற்றுலா ஒன்றை வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளார். மேலும் 10 வெற்றியாளர்கள் டுபாய் நாட்டிற்கான 4 நாள் சுற்றுலாவையும், 25 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள்  பெங்கொங் நகருக்கான 3 நாள் சுற்றுலாவையும் வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர். வாராந்தம் இடம்பெறவுள்ள அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டிழுப்புக்கள் மூலமாக வெற்றியாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.

டீ-சேர்ட்டுக்கள், தொப்பிகள், கைப்பட்டிகள், கோப்பைகள் மற்றும் ஏனைய பெறுமதியான வர்த்தக நாமப்பொருட்கள் அடங்கலாக ஏராளமான Huawei பொருட்களை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள வீதியுலாக்கள் மற்றும் அனுபவ கண்காட்சிகள் மூலமாக Huawei நுகர்வோர் வெல்ல முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg