Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

BCAS ‘சிசு சவிய’: 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆரம்பம்

In வணிகம்
Updated: 07:23 GMT, Nov 15, 2015 | Published: 06:46 GMT, Nov 15, 2015 |
0 Comments
1251
This post was written by : Varothayan

BCAS’சிசு சவிய’ 100 மாணவர்களுக்கு 80 மில்லியன் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக BCAS பட்டக்கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் அப்துல் ரஹ்மான் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

யாழ். ஞானம்ஸ் விருந்தினர் விடுதியில் BCAS பட்டக்கல்லூரியின் புதிய புலமைப்பரிசில் அங்குரார்ப்பண நிகழ்வின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

BCAS பட்டக்கல்லூரி உயர்தரம் பூர்த்தி செய்த மாணவர்களின் ண – ளஉழசந புள்ளியின் அடிப்படையில் மாணவர்களுக்கான பட்டப்படிப்பிற்கான புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் 30 வீதமானவர்களுக்கே பல்கலைக்கழக அனுமதிகள் கிடைக்கப்படுகின்றன. இதனால், 70 வீதமானவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புக்களை தனியார் கல்வித்துறையை நாட வேண்டியுள்ளது.

அரச பல்கலைக்கழக அனுமதிக்காக பின்பற்றப்படும் நடைமுறைகளை ஒட்டி z – score  புள்ளிகளை அடிப்படையாக கொண்ட விசேட புலமைப்பரிசில் திட்டமாகவே BCAS ‘சிசு சவிய’ புலமைப்பரிசில் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புலமைப்பரிசில் திட்டத்தின் மூலமாக சிவில் இன்சினியரிங், கொம்பியுடிங் பயோ மெடிகல் சையன்ஸ், சட்டத்துறை, பிசினஸ் இன்போமேசன் சிஸ்ரம், பிசினஸ் மனேஸ்மென்ட், ஆகிய துறைகளில் 3 வருட பட்டப்படிப்பு பாடநெறிக்களை இலவசமாக தொடர்வதற்கான வாய்ப்புக்களை bcas வழங்குகின்றது.

இப்புலமைப்பரிசில்களுக்கு தகுதிபெறும் மாணவர்கள் தமது 3 வருட கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்கின்ற போது, தமது இறுதித் தகைமையினை லண்டனில் பிரபல பல்கலைக்கழகங்களான லண்டன் சவுத் பாங் பல்கலைக்கழகம் மற்றும் வோல்வர்கம்டென் பல்கலைக்கழக தகைமையினை பெற்றுக்கொள்வார்கள்.

இலங்கையில் கொழும்பு, கண்டி, குருநாகல், மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தனது வளாகங்களையும் கிளைகளையும் BCAS கம்பஸ் புலமைப்பரிசில்களுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் தமக்கு வசதியான வளாகங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்கியுள்ளன.

இந்த புலமைப்பரிசில்களுக்கான தெரிவு முழுக்க z – score  புள்ளிகளை அடிப்படையாக கெண்டும், விசேட தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றை அடிப்படையாக கொண்டும் அமையும்.

சிசு சவிய புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்களையும், மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள www.bcas.lk என்ற இணையத்தளத்தினை அல்லது வார இறுதி பத்திரிகைகளில் வெளியாகும்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 076 5204505 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெயர், முகவரி, z – score  புள்ளியையும் sms செய்வதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 25.12.2015 அன்று நிறைவடையும், இக்கற்கை நெறிகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு, ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகும் என்றும் bcas கம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg