Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து வெந்நீர்

In
Updated: 07:32 GMT, Nov 15, 2015 | Published: 07:09 GMT, Nov 15, 2015 |
0 Comments
1391
This post was written by :

அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், இனப்புப் பண்டம் அல்லது பூரி சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு கோப்பை வெந்நீரை எடுத்து பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்ற பிரச்சினை உங்களுக்கு உண்டா?, ஒரு கோப்பை வெந்நீரை குடியுங்கள். மலப்பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கலாம். வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருக்கிறது.

சாப்பிட்டு முடிந்ததும் சுடுதண்ணீர் குடிப்பது, இதயத்துக்கு மிகவும் நல்லது. ஏனெனில் உடலில் கொழுப்புகளை சேரவிடாமல், கரைத்துவிடும் திறன் வெந்நீருக்கு உள்ளது. உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள். நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் போய்விடும். மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.

குளிர் நீர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், ஜலதோஷம் விரைவில் குணமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg