Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி ஒரு கோடியே 50 லட்சம் கிலோ கிராமினால் வீழ்ச்சி

In வணிகம்
Published: 09:24 GMT, Nov 15, 2015 |
0 Comments
1338
This post was written by :
Tea Export in SRi Lanka

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையானது, இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஒரு கோடியே 50 லட்சம் கிலோ கிராமினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. இதனால், குறித்த காலப்பகுதியினில் தேயிலை ஏற்றுமதி மூலம் இரண்டாயிரத்து நாநூறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி, இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் தேயிலை உற்பத்தி பத்து லட்சத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள விடயமும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இத்துறையில் பணி புரிவோர் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ரோகன் பெர்ணாண்டோ, தேயிலையின் விலை மேலும் வீழ்ச்சியடையலாம் என எண்ணும், வெளிநாட்டு தேயிலை இறக்குமதியாளர்கள், உறுதியான வாங்குபத்திரம் வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg