Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய சந்தையில் விற்பனைக்கு தயாராக இருந்த கார்களை திரும்பப் பெறும் போர்ட்

In வணிகம்
Updated: 09:46 GMT, Nov 15, 2015 | Published: 09:46 GMT, Nov 15, 2015 |
0 Comments
1347
This post was written by :

போர்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு தயாராக வைத்துள்ள தனது 16,444 கார்களை திரும்ப பெற்றது. இந்த கார்கள் அனைத்தும் 2013 நவம்பர் முதல் 2014 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டவையாகும்.

தடுப்பானுக்கு (பிரேக்) செல்லும் ரியர் டிவிஸ்ட் பீம் போல்ட்கள் சரியாக பொருத்தப்படாததால் விபத்துகள் அதிகரிப்பதாக வந்த தகவலை அடுத்தே அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போர்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பழுதான கார்களுக்கு தேவைப்படும் சோதனையை இலவசமாக செய்து தருமாறு விறியோகஸ்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு எமது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கார்களுடன் சேர்த்து, இதுவரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தயாரான 13.25 லட்சம் கார்களை போர்ட் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg