Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கறுவா உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

In வணிகம்
Updated: 10:52 GMT, Nov 15, 2015 | Published: 10:52 GMT, Nov 15, 2015 |
0 Comments
1376
This post was written by :

கறுவா உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட கறுவா உற்பத்தியாளர்களில் தற்போதைய நிலைமை மற்றும் ஏற்றுமதி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான கலந்துரையாடலொன்று அண்மையில் அமைச்சர் தயா கமகே தலைமையில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 வருட காலத்தில் ஒரு மில்லியன் டொலர் வருமானத்தை பெறுவதற்கான கறுவா உற்பத்தியை எதிர்பார்ப்பதாகவும் அதற்காக உற்பத்தியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 32,500 ஹெக்டேயரில் கறுவா பயிரிடுவதனூடாக 19,000 மெற்றிக் தொன் கறுவா கிடைக்கப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg