Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்த சஷ்டியின் பெருமையும் மகிமையும்!

In ஆன்மீகம்
Updated: 06:26 GMT, Nov 16, 2015 | Published: 05:08 GMT, Nov 16, 2015 |
0 Comments
1410
This post was written by :

அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்ய தேவர்கள் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவு படுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆணவம், கன்மம், மாயை எனும் 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழி அமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.

சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பதற்கேற்ப கந்தசஷ்டியில் விரதமிருந்தால் அக பையாகிய ‘கருப்பையில்’ கரு உண்டாகும் என்பது மறை பொருள்களாகும்.

வசிட்ட மாமுனிவர் முகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கி விட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படு கின்றன. உள்ளுறுப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின் போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும், அமைதி கிட்டுகிறது.

நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது. உண்ணா நோன்பின் போது இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. உண்ணா நோன்பின் போது, தூய நினைவுகள் வளர்கின்றன.விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான்.

கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது. உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும், எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல்தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம்.

வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம். எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் சஷ்டி விரத நாட்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg