Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரக்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை சடுதியாக உயர்வு : நுகர்வோர் பாதிப்பு

In வணிகம்
Updated: 06:56 GMT, Nov 16, 2015 | Published: 06:56 GMT, Nov 16, 2015 |
0 Comments
1415
This post was written by : Varshini

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு, மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

விவசாயிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த நாட்களில் மலையகத்தில் 40, 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மரக்கறியின் விலை தற்போது, 150 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

மேலும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உள்ளூர் மரக்கறிகளின் விலை 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக பச்சை மிளகாயின் விலை 1000 தொடக்கம் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தம்புள்ளை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை அரிசி, சீனி, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரஞ்ஜித் விதானகே தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg