Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமானதாக அமையும்: நிதி அமைச்சர்

In வணிகம்
Updated: 09:52 GMT, Nov 16, 2015 | Published: 08:06 GMT, Nov 16, 2015 |
0 Comments
1309
This post was written by :

2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இது குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நேரடி வரி முறைமைக் கொள்கை நீண்ட கால அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வரி தற்போது 80 இற்கு 20 என்ற விகிதாசாரத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் விதிதாசாரத்தை 60 இற்கு 40 ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இம்முறை சமர்பிக்கப்படவுள்ள திட்டமானது முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களைப் போன்றல்லாது புரட்சிகரமான திட்ட பிரேரணையாக அமையும் என்றும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் முந்தைய அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக துண்டு விழும் தொகையினை சமன்படுத்துவதில் பெரும் சிரமத்தை இந்த அரசாங்கம் எதிர்நோக்கிறது என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் என்றும், வரி விதிப்பு கொள்கை பொதுமக்களை அதிக அளவில் பாதிக்காத வகையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg