Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்த்திகை மாதப்பிறப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

In ஆன்மீகம்
Updated: 10:04 GMT, Nov 17, 2015 | Published: 10:04 GMT, Nov 17, 2015 |
0 Comments
1975
This post was written by :

ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதலாம் திகதியில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு மண்டல பூஜை, மகர பூஜை, ஜோதி தரிசனம், படிபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் முதலாம் திகதி நடை திறக்கப்பட்டு, கார்த்திகை முதலாம் திகதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.

அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மண்டல பூஜையும், ஜனவரி 15ஆம் திகதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, தற்போது 50 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg