Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை சந்தையில் முதலீடு செய்யும் நாடுகளை தரப்படுத்துகின்றது Lamudi இலங்கை

In வணிகம்
Updated: 12:30 GMT, Nov 17, 2015 | Published: 12:10 GMT, Nov 17, 2015 |
0 Comments
1370
This post was written by :

இணையவெளி ஆதன சந்தைப்படுத்தல் தளம் Lamudi இலங்கையின் ஆய்வுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா மற்றும் ஹொங்கோங் ஆகிய நாடுகள் இலங்கையின் ஆதன சந்தையில் முதலீடு செய்யும் பட்டியலில் முன்னனி வகிக்கின்றன.

இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் இலங்கை சந்தையில் முதலீடு செய்யும் நாடுகளை தரப்படுத்துகின்றது lamudi  இலங்கை. அதிகரித்து வரும் அரச ஊக்குவிப்புக்களின் அடிப்படையில் தெற்காசிய வலயத்தில் சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை காணப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா, சிங்கபூர், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி முதலீடுகளின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டு துறை வளர்ச்சிப்போக்கினை காட்டி வருகின்றது.

அண்ணளவாக 42 வீதமான முதலீடுகள் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக 50 வீதமான முதலீடுகள் வீடமைப்பு, ஆதன அபிவிருத்தி மற்றும் வர்த்தக மையங்கள் அமைப்பிற்காக செலவிடப்பட்டிருக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg