Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்ற சூரன் போர்

In ஆன்மீகம்
Updated: 14:26 GMT, Nov 17, 2015 | Published: 14:26 GMT, Nov 17, 2015 |
1 Comment
1972
This post was written by : Sujitharan

கடந்த 12ம் திகதி ஆரம்பமாகிய கந்த சஷ்டி விரதத்தின் இறுதிநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் திருகோணமலையில் அமைந்துள்ள வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் மற்றும் முத்துக் குமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.

இவ்வாலயங்களில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. krishnabavan