Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரசம்ஹாரம்

In ஆன்மீகம்
Updated: 15:07 GMT, Nov 17, 2015 | Published: 14:27 GMT, Nov 17, 2015 |
0 Comments
1239
This post was written by : Sujitharan

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் இன்று மலையத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் அருளை வேண்டி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.

இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியதுடன், சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் மலையகத்தில் ஹற்றன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலயத்தில் நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.

இந்த சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg