Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவபெருமானுக்கு பிரியமான தும்பை மலர்

In ஆன்மீகம்
Updated: 06:15 GMT, Nov 18, 2015 | Published: 06:15 GMT, Nov 18, 2015 |
0 Comments
3802
This post was written by :

தும்பைப்பூ சிவனுக்குரிய மலர்  என்பதற்கு ஏராளமான பக்தி இலக்கியச் சான்றுகள் உள்ளன. தும்பைப்பூவை விரும்பிச் சூடும் பரமனை ’தும்பைசூடி’ எனத் திருமுறைகள் போற்றுகின்றன.

ஒரே ஒரு தும்பைப் பூவை பக்தியுடன் பரமசிவனின் பாதத்தில் வைத்து வழிபட்டால், அந்த பக்தனுக்கு அவர் தங்கத் தாம்பாளத்தில் மோட்சத்தைக் கொடுப்பாராம்.

கேரளத்து சிவன் கோவில்களில் தும்பைப் பூ அர்ச்சனை மிகவும் விசேஷமாக நடைபெறும். மாங்கல்ய பாக்கியம் வேண்டி கோவில் சிவனுக்கு தும்பைப்பூ மாலை சாத்துவது வழக்கமாகும்.

தும்பைப் பூ சிவபெருமானுக்குரியது என்றாலும், விநாயகருக்கும் பிடித்த மலராகும். தும்பைப் பூ கொண்டு துர்க்கையை பூஜை செய்தால் தரித்திரத்தைத் துரத்தி தன தான்யம் பொழிந்திடுவாள் என்கிறது ஒரு பாடல். நவராத்திரி தினங்களில் ஏழாம் நாள் அன்று, சரஸ்வதி தேவி அலங்காரம் செய்து அல்லது அவளது திருவுருவத்தின் எதிரில் தும்பைப் பூ கோலம் போட்டு வழிபடுவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

இத்தனை ஆன்மிக பெருமைக்குரிய தும்பைப் பூவை சங்க இலக்கியங்களும் விட்டு வைக்கவில்லை. இலக்கியத்தில் சில இடங்களில் தும்பைப் பூ மாலை அணிந்திருந்தால் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருப்பதைக் குறிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ராவணன் போருக்குப் புறப்பட்டபோது தும்பைப் பூ மாலை போட்டுச் சென்றதாக கம்பர் யுத்தகாண்டத்தில் குறிப்பிடுகிறார். பாண்டவர்களும் கவுரவர்களும் போரிட்டதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலிலும் தம்பைப் பூ இடம் பெற்றுள்ளது.

தும்பை மலருக்கு எதிராளியை வசீகரிக்கும் ரகசிய குணம் இருந்ததை அகத்தியர் தனது ’அமுத கலைஞானம் 1200’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது கவிழ்த் தும்பைச் செடியை சாப நிவர்த்தி செய்து, வேரை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சூரியன் முன் வைத்து தொழுது, பின்னர் திலகமாக இட்டால் கண்டவர்கள் மயங்குவர் என்கிறார் அகத்தியர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg