Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்காபிஷேக தத்துவம்

In ஆன்மீகம்
Updated: 06:21 GMT, Nov 18, 2015 | Published: 06:21 GMT, Nov 18, 2015 |
0 Comments
1415
This post was written by :
96b962a8-806a-4624-ab98-bc2c424e74a9_S_secvpf

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படும். அவரவர் வசதிப் படி 108, 1008 என்ற ரீதியில் சங்குகளில் அபிஷேகப் பொருள்களை நிரப்புவர்.

சிவன் அபிஷேகப்பிரியர். இவரது தலையில் கங்காதேவி நிரந்தரமாகக் குடியிருந்து குளிர்விக்கிறாள். சங்குகளில் புனிதநீர் நிரப்பி, அத்தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து, கார்த்திகை சோமவாரத்தில் அபிஷேகம் செய்கிறார்கள்.

இறைவனுக்கு மனிதன் கட்டுப்பட்டவன். அதுபோல், பக்தனுக்கு இறைவனை தன்னுள் அடக்கும் சக்தியுண்டு என்பதை விளக்கும் உயரிய தத்துவம் சங்காபிஷேகத்தின் மூலம் விளக்கப்படுகிறது.

சிவாலயங்களில் நடத்தப்படும் சங்காபிஷேகத்தை உன்னிப்பாக கவனித்தால், அதற்கும் மனித இனத்துக்கும் உள்ள தொடர்பு தெரியவரும். முதலில் 1008 சங்குகளையும் 12 ராசி குண்டங்களாகப் பிரிப்பார்கள். 12 ராசி குண்டங்களிலும் தலா 9 சங்குகள் வீதம் 108 சங்குகளை வைப்பார்கள். இதையடுத்து 8 திசைகளிலும் 8 சங்குகளை இடம் பெறச் செய்வார்கள்.

இந்த சங்குகளுக்கு மத்தியில் பிரதானமாக வலம்புரி சங்கு ஒன்றையும், இடம்புரி சங்கு ஒன்றையும் வைப்பார்கள். அந்த வலம்புரி, இடம்புரி சங்குகளை இறைவன், இறைவியாக பாவித்து பிரதிஷ்டை செய்வார்கள். இவ்வாறு அமைக்கப்படும் 118 சங்குகளும் ‘எல்லாம் ஒருவனே’ என்ற தத்துவப்படி அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு சங்கிலும் நீர் ஊற்றி மலர், தர்ப்பை, மாவிலை வைத்து வேத மந்திரிகள் ஓதி பூஜிப்பார்கள். இந்த மந்திரங்களை தர்ப்பபை ஈர்த்து சங்குகளில் உள்ள நீரை புனித நீராக மாற்றும். அந்த புனித நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது இறைவன் மனம் குளிர்ந்து நாம் கேட்டதை எல்லாம் தருவார் என்பது நம்பிக்கை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg