Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லட்சுமி கடாட்சம் தரும் துளசி வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 06:26 GMT, Nov 18, 2015 | Published: 06:26 GMT, Nov 18, 2015 |
0 Comments
2448
This post was written by :

ஒவ்வொருவர் இல்லத்திலும் கட்டாயம் துளசிச் செடி இருக்க வேண்டும். ஐஸ்வர்யத்தையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது துளசி. துளசி இடிதாங்கியாகவும் விளங்குகிறது.

துளசி வேரை கையில் கட்டிக்கொண்டால் இடி பயம் ஏற்படாது. வீட்டின் வாசலில் மஞ்சளில் நனைத்த துணியில் துளசியைக் கட்டி வைத்தால் இடியானது வீட்டின் மீது படாது என் கூறுகிறார்கள்.

துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.

நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபடவேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg