Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் இடம்பெறும் அமெரிக்க வர்த்தக சம்மேளன கண்காட்சி

In வணிகம்
Updated: 13:38 GMT, Nov 18, 2015 | Published: 12:52 GMT, Nov 18, 2015 |
0 Comments
1255
This post was written by :

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (AmCham) ஆகியன இணைந்து கொழும்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கண்காட்சி – 2015 (US Trade Show-2015 ) ஒன்றை நடத்தி வருகின்றன.

US Trade Show  2015 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷெப் ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கண்காட்சியை நேற்று கலதாரி ஹோட்டலில் திறந்து வைத்து உரையாற்றிய இலங்கை மற்றும் மலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷெப் தெரிவிக்கையில்,அமெரிக்கா இலங்கையில் முதலிடுவதற்கு இதுவே தகுந்த காலம். வர்த்தக கொடுக்கல் – வாங்கல்களை இலகுபடுத்தி தரமான பொருட்களை விநியோகிக்க அமெரிக்க அரசு எதிர்பார்த்துள்ளது என குறிப்பிட்டுள்ளர்.

மேலும் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக வியாபாரம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களுக்கு இலங்கையில் சிறந்த கேள்வி நிலவுகின்றது. தரமான பொருட்களை வழங்க வேண்டுமென்பதிலும் அமெரிக்கா அரசு உறுதியாகவுள்ளதுடன் பொருட்களின் வர்த்தகப் பரிமாற்றத்தில் சிறந்த நுட்பங்களை கையாண்டு இரு நாடுகளுக்குமிடையிலான நிலையான உறவுகளை பேண இதுவே தகுந்த காலமாகும். எனவும் அவர் தெரிவித்திருந்தார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg