Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேயிலை விலை அதிகரிப்பு: தோட்ட நிர்வாகம் மகிழ்ச்சி

In வணிகம்
Updated: 12:48 GMT, Nov 18, 2015 | Published: 12:48 GMT, Nov 18, 2015 |
0 Comments
1265
This post was written by :

தேயிலையின் விலை மீளவும் உயர்வடைந்துள்ளதாகவும், ஒரு கிலோ தேயிலையின் விலை 422 வரை உயர்வடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயளாலர் உபால் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோ தேயிலையின் விலை 390 ரூபாவாக காணப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தேயிலையின் விலையானது எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 430 ரூபா வரை அதிகரிக்க கூடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேயிலை விற்பனையில் அரசு தலையீடு செய்து அதன் விலை குறித்து தீர்மானம் ஒன்றை முன்வைத்ததை அடுத்தே தேயிலையின் விலை உயர்வடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, தேயிலையை சந்தையில் இருந்து கொவனவு செய்வதற்கு அரசினால் 9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத் தொழில் அமைச்சின்செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg